Thursday, June 25, 2009

2009- வானிலைவிடும் எச்சரிக்கை-சரியான எனது கணிப்புகள்

பிரபல இந்திய நாளிதழ்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் 2009ம் வருடதென்மேற்கு பருவ மழை பொய்த்து வருவதாகவும் இதனால் மிகமோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் கவலை தெரிவிக்கின்றன.
ஆனால்,இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் இந்த மோசமான நிலையை கணிக்க தவறியதுடன் ஜூலை,ஆகஸ்ட்,மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழை பெய்யும் எனவும் ,குறைந்தது 80சதவீதம் மழை நீர் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் உறுதியற்ற அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 2009 முடிவிலேயே குறைந்த மழையளவை கண்ட பிறகு தென்மேற்கு பருவமழை ‘எல்நினோ’ அல்லது வேறு காரணங்களால் பொய்த்துவிட்டதாக அறிவிக்கும் என நான் திடமாக நம்புகிறேன்.
இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் தென்மேற்கு பருவமழையின் பாதிப்புக்களைப்பற்றி மேமாதத்தில்கூட கணிக்க முடியவில்லை.
60வருடங்களில் பார்த்திராத மிக மோசமான 2009 வருடத்தின் தென்மேற்கு பருவமழையை பற்றிய என்னுடைய கணிப்பு 2009 ஜனவரி 1-15 ஸ்ரீபெரும்புதூர் நியூஸ் இதழில் வெளியாகியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
கடந்த 7வருடங்களாக துல்லியமாக கணித்து நடைமுறையில் பலித்த என்னுடைய பருவமழை கணிப்புகள் மற்றும் வெள்ளம் பூகம்பம் போன்ற கணிப்புகளும் அரசு அதிகாரிகளையோ அரசியல்வாதிகளையோ சென்றடையாதது மிகுந்த மனவருத்ததை தருகிறது.
பலவருடங்களுக்கு முன்பாகவே பருவமழைகளையும் இயற்கை சீற்றங்களையும் கணிக்கக்கூடிய என்னுடைய ஆராய்ச்சி அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கு சரியானமுறையில் சேவையாற்றிட நிச்சயம் உதவி செய்யும்.இதனால் தானிய மற்றும் நீர்நிலை கையிருப்பும் சரியான முறையில் கையாள முன்கூட்டியே திட்டமிடமுடியும்.
இந்திய அரசாங்கம் இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமோ அல்லது புதிய ஆராய்ச்சி நிறுவனம் மூலமாகவோ நடப்புமுறைகளுடன் என்னுடைய ஆராய்ச்சி முறைகளையும் இணைத்து என்னைவிட திறமையானவர்களின் உதவியுடன் நெடுங்கால வானிலை முன்னறிக்கைகளை இனிவரும் காலங்களில் தயாரிக்க முன் வரவேண்டும் என விரும்புகிறேன்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் இழப்புக்கள் குறைக்கப்படவும் மேற்கண்ட யோசனை பலனளிக்கும் என நம்புகிறேன்.


வானிலை முன்னறிக்கை
(ஜூலை-2009க்கானது)

இதுவரை நிலையற்றதன்மை கொண்டதாக காணப்படும் தென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தின் கீழ்கண்ட நாட்களில் மிதமான செயல்பாட்டில் இருக்கும்.
1.ஜூன் 27 முதல் ஜூன்30க்குள் பலத்த முதல் மிகபலத்த மழை அங்குமிங்குமாக பெய்யும். மேற்படி மழை கடலோர கர்நாடகம்,கோவா,மஹாராஷ்டிரா,மத்தியபிரதேஷ்,ஒரிஸ்ஸா, ஆந்திரா,மற்றும் வடக்கு கேரளா மாநிலங்களில் பலனளிக்கும்.
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழையே கிடைக்கும்.

2.பலத்த சுழல் காற்றுடன் கூடிய பலத்தமழை,திடீர் அடைமழை(cloud buster) ஜூலை 1 முதல் 6ம் தேதிக்குள் மேற்கூறிய மாநிலங்களை தவிர, வடமேற்குமாநிலங்களிலும் உண்டாகும்.

3.ஜூன் 30 ம்தேதியிலிருந்து ஜூலை 4ம்தேதிக்குள் பலத்த நிலச்சரிவு அல்லது மிதமான பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவின் மேற்கு கடலோரம் மற்றும் அமேரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் பாதிப்பை உண்டாக்கலாம்.

4. ஜூலை 13 வரை மறுபடியும் பருவமழை நிலையற்றதன்மை கொண்டதாக இருக்கும். அங்குமிங்குமாக ஓரிரு இடங்களில் மிதமான மழையே கிடைக்க வாய்ப்புள்ளது. மிதமானது முதல் பலத்தமழை ஜூலை14 முதல் ஜூலை 18வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கண்ட நிகழ்வுகள் மேலே கூறிய மாநிலங்களை தவிர பிற வடமாநிலங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

5.இந்த வருடத்தின் தென்மேற்கு பருவமழையின் மிகமோசமான காலகட்டம் ஜூலை 22 முதல் தொடங்கும். இந்த வறட்சியான நிலைப்பாடு செப்டம்பர் மூன்றாவது வாரம் வரை தொடரும். இந்திய தீபகற்பத்தை சுற்றி குறைந்தது ஏழு புயல் சின்னங்கள் மேற்படி காலகட்டத்தில் உருவாகும்.

6.முதல் பலத்த புயற்சின்னம் ஜூலை 25 முதல் ஜூலை 30க்குள் வங்காள விரிகுடாவில் ஏற்படும்.

7.ஜூன் முதல் வாரத்தில் இருந்து செப்டம்பர் முடிவுவரை பெய்யும் மழை இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் வருடமழை அளவுக்கு 40 சதவீதம் குறைந்தே இருக்கும். காலத்தில் தவறிய மழை செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரம் வரை பலன் கொடுக்கும். இருந்தாலும் கேரளாவும் தமிழ்நாடும் இந்த காலத்தில் குறைந்த அளவு மழையே பெறும்.

1 comment:

புருனோ Bruno said...

நீங்கள் கணிக்கும் முறையை விளக்கலாமே