Friday, June 12, 2009

2009ல் தண்ணீருக்கு தாளம் போடப்போகிறோம்? இந்த ஆண்டிற்கான அதிர்ச்சிதரும் வானிலைகணிப்பு

மே மூன்றாம் வாரத்தில் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை ஜூலை 2ஆம் வாரத்தில் மிகமிக பலவீனமடைந்துவிடும். நமது வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளதுபோல் சராசரியான மழை கிடைக்க வாய்ப்பு நிச்சயம் கிடையாது. ஜூலை இரண்டாம் வாரம் முதல் செப்டம்பர் மூன்றாம் வாரம் வரை குறிப்பிட்ட சிலதினங்களில் சில இடங்களில் மட்டும் பலத்த காற்றுடன் கூடிய மழை பாதிப்பை உண்டாக்கும்.இந்த வருடத்தில் வடக்கு 14டிகிரி அட்சரேகைக்குக்கீழ் மிக குறைந்த மழையே கிடைக்கும்.
ஜூன் 13 முதல் ஜூலை1 வரை பலத்த முதல் மிகபலத்த மழை கர்நாடகா,ஆந்திரா,மகாராஷ்டிரா,மத்தியபிரதேஷ்,ஒரிஸ்ஸா,கிழக்கு உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட்,சத்தீஷ்கர்,மற்றும் மேற்கு வங்காளம், வடகிழக்குமாநிலங்கள் பயன்பெறும்.
வடக்குதமிழ்நாடும் வடக்கு மற்றும் கடலோர கேரளாவில் லேசானது முதல் மிதமான மழையே கிடைக்கும்.
மேற்கண்ட காலத்தில் பகல் நேர வெப்பநிலை சராசரி அல்லது சராசரிக்கு குறைவாகவே இருக்கும்.

2 comments:

Arun Kumar said...

@ஜூன் 13 முதல் ஜூலை1 வரை பலத்த முதல் மிகபலத்த மழை@

sir your predications are not working. there is no rain from the perod june 13 to till date.of course only 4 days left.

Arun Kumar said...

please dont take it in wrong context, is there any chances to bring rains