எல்லாப்புகழும் இறைவனுக்கே.
வணக்கம்,
உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனங்களின் வானிலை அறிக்கை என்பது காலங்காலமாக கேலிக்குட்பட்ட பொருளாக இருந்துவருகிறது.
இந்திய ஆயுர்வேதம் எப்படி வேதத்தின் வாயிலாக நமக்கு கிடைத்ததோ,அதேபோல் கிடைத்த இந்திய வானசாஸ்திரம் தன்னுள் வியக்கத்தகு உபயோகமான பொக்கிஷங்களை வைத்திருக்கிறது.
இதில் மேம்போக்காக தனிமனித வருமானத்திற்காகவும் ஒரு குறிப்பிட்டக்கால புகழ்ச்சிக்காகவும் சிலர் ஜோதிடக்கலையாக உபயோகிக்கிறார்கள்.
மேற்படி ஜோதிடக்கலையே விஞ்ஞானபூர்வமானதுதான் என்பதுபற்றியும், இயற்கைச்சீற்றங்கள்,வானிலை நிகழ்வுகள் பற்றிய என்னுடைய 20வருட ஆராய்ச்சியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ள பேராசைப்படுகிறேன்.
மேற்படி கலை 100 சதவீதம் பூரணமான முடிவுகளை என் ஒருவன் முயற்சியால் மட்டும் அடைய முடியாது. என்னைவிட நவீனவானசாஸ்திரத்திலும், சமஸ்கிரத புலமையிலும் தகுதிஉள்ளவர்களால் வியக்கத்தகு நிலையை எட்டவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த வலைப்பூ துவங்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு பகுதியில் தொலைநோக்கு வானிலை அறிக்கைகள்,பெருமழை,புயல் போன்ற இயற்கை சீற்றங்கள், மற்றும் பூகம்பங்கள்,நிலச்சரிவுகள் இவற்றை பற்றிய என்னுடைய முன்னறிக்கைகள் இடம்பெறும்.
இரண்டாம் பகுதியில் தனிமனித ஜோதிடத்தில் விஞ்ஞானபூர்வமான நிலைப்பாடுகள் குறித்து என்னுடைய கருத்துக்களும்,உபயோகமான சூத்திரங்களும் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்.
நன்றி
இனி கடந்த டிசம்பர் 2008ல் வெளியிட்ட என்னுடைய 2009 முழுமைக்குமான வானிலை அறிக்கையினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுடைய எந்தவிதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ள காத்திருக்கிறேன்.



2 comments:
புதியவரான உங்களை வலையுலகம் வரவேற்கிறது.
ஆரம்பமே மிகவும் அரிய தகவல்கள் உங்கள் ஆய்வில் இருக்கும் எனத்தெரிகிறது.தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
கல்லாடன்
நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவையும் ஆரோக்கியமான விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.
Post a Comment